< Back
மாநில செய்திகள்
பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்
தேனி
மாநில செய்திகள்

பொது இடங்களில் முக கவசம் கட்டாயம்

தினத்தந்தி
|
23 Jun 2022 4:10 PM GMT

தேனி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆலோசனை கூட்டம்

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிகர் சங்கங்கள், உணவகங்கள், திருமண மண்டபம், தியேட்டர், துணிக்கடை, நகைக்கடை உரிமையாளர்கள், பஸ், ஆட்டோ உரிமையாளர்கள் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்திய அளவில் பல மாநிலங்களில் தற்போது கொரோனா நோய் தொற்றின் தாக்கம் மீண்டும் உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் பதிவாகும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதன் தாக்கத்தை குறைக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உணவகங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், விடுதிகள், பேக்கரி கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்வதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை, முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

நடவடிக்கை

அனைத்து பள்ளிகளிலும் அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களிலும் இதுபோன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பரிமளாதேவி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்