< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவிப்பு!
|23 Jun 2023 9:28 PM IST
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களை விடுவிக்கக்கோரி மண்டபம் மீனவர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
ராமேஸ்வரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த அந்தோணி பிரசாத் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 5 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து, இலங்கையின் மயிலட்டி கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 5 மீனவர்களையும், விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மண்டபம் பகுதி மீனவர்கள் அறிவித்துள்ளனர்.