< Back
மாநில செய்திகள்
வத்தலக்குண்டு அருகே கலியுக சிதம்பரேஸ்வர் கோவிலில் மண்டல பூஜை
திண்டுக்கல்
மாநில செய்திகள்

வத்தலக்குண்டு அருகே கலியுக சிதம்பரேஸ்வர் கோவிலில் மண்டல பூஜை

தினத்தந்தி
|
23 Oct 2023 3:00 AM IST

வத்தலக்குண்டு அருகே கலியுக சிதம்பரேஸ்வர் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

வத்தலக்குண்டு அருகே பூசாரிபட்டி வஞ்சிஓடை நதிக்கரையில் பிரசித்தி பெற்ற கலியுக சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். இந்த கோவிலில் கடந்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினசரி மண்டல பூஜை நடந்தது.

இந்தநிலையில் நேற்று 48-வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதையொட்டி பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கொண்டு மூலவர் கலியுக சிதம்பரேஸ்வரர், மகாவிஷ்ணு, கன்னிமூலகணபதி, சிவகாமி அம்மாள், சுப்ரமணியர், வள்ளி-தெய்வானை, பிரம்மா, விருமாண்டி, துர்க்கை, பேச்சியம்மன், ராக்காச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 48-வது நாள் மண்டல அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் நிறைவு நிகழ்ச்சியாக 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜைகளை தலைமை பூசாரி சுந்தர் தலைமையில் பூசாரிகள் செய்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்