< Back
மாநில செய்திகள்
பத்திரகாளி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

பத்திரகாளி அம்மன் கோவிலில் மண்டல பூஜை

தினத்தந்தி
|
25 March 2023 12:15 AM IST

சாயல்குடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.

சாயல்குடி,

சாயல்குடி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது.சாயல்குடி சத்திரிய இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று 48-ம் நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், சங்காபிஷேகம், யாகசாலை பூஜைகள், பத்திரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மண்டல பூஜை விழா நடைபெற்றது. பத்திரகாளியம்மனுக்கு சந்தனம், குங்குமம் பால், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாயல்குடி சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்