< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
வராகி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
|26 July 2023 6:01 AM IST
வராகி அம்மன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்றது
அலங்காநல்லூர்,
மதுரை மேற்கு யூனியன் சத்திரப்பட்டி அருகே கல்லம்பட்டியில் உள்ள வராகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதைதொடர்ந்து இக்கோவிலில் பூஜைகள் தினமும் நடந்தது. பின்னர் 48-வது நாள் மண்டல யாக பூஜைகள் நடந்தது. இதில் மேளதாளம் முழங்க நடந்த இந்த விழாவில் மங்கள இசையுடன், மஹா கணபதி ஹோமம், 108 சங்காபிஷேகம், அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹிதி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது, பின்னர் மூலவர் வராகி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பூஜை மலர்களும், புனித தீர்த்தமும், அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி செந்தில்குமார் மற்றும் திருப்பணி குழுவினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.