< Back
மாநில செய்திகள்
சிவகங்கை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு
மாநில செய்திகள்

சிவகங்கை மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
19 Jan 2024 2:44 PM IST

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக கோவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் (வயது 56) என்பவர் மஞ்சுவிரட்டு போட்டியை காண சென்றுள்ளார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவரை மாடு முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கண்டிபட்டி மஞ்சுவிரட்டில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்