< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வழக்கு - மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒத்திவைப்பு
|14 Aug 2024 8:31 PM IST
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை ஒத்திவைத்துள்ளது.
மதுரை,
மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றக் கூடாது என தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத் தொடர்ந்து மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும், ஆகஸ்ட் 29-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.