< Back
மாநில செய்திகள்
பரங்கிமலையில் வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்
சென்னை
மாநில செய்திகள்

பரங்கிமலையில் வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

தினத்தந்தி
|
14 March 2023 10:37 AM IST

பரங்கிமலையில் மாஞ்சா நூல் வாலிபரின் கழுத்தை அறுத்தது. இதுக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தரமணி கானகம் களிக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குணசீலன் (வயது 30). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், பரங்கிமலையில் உள்ள தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த காற்றாடி மாஞ்சா நூல் அவர் மீது விழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர், கையால் தடுத்தார். எனினும் அவரது கழுத்து மற்றும் அவரது வலது கை மோதிர விரலில் மாஞ்சா நூல் கயிறு அறுத்ததில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவரது கை விரலில் 3 தையல்களும், கழுத்தில் ஏற்பட்ட லேசான சிராய்ப்பு காயத்துக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இது பற்றி பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்