< Back
மாநில செய்திகள்
மணப்பாடு கடலில் மூழ்கி பலி:மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மணப்பாடு கடலில் மூழ்கி பலி:மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

தினத்தந்தி
|
12 Oct 2023 2:58 AM IST

மணப்பாடு கடலில் மூழ்கி பலி, மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

குளச்சல்,

மணப்பாடு கடலில் குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மூழ்கியதில் 3 பேர் மாயமானார்கள். இதில் ஒரு சில நாட்களில் பயஸ் உடலும், 10 நாட்களுக்கு பிறகு ஆன்றோ உடலும் பிணமாக மீட்கப்பட்டது. இந்தநிலையில் 12 நாட்களுக்கு பிறகு ஆரோக்கியம் உடலும் அழுகிய நிலையில் ராமேசுவரம் கடற்கரையில் பிணமாக ஒதுங்கியது.

இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஆரோக்கியம் உடல் குளச்சலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று காலை 8 மணிக்கு புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்