< Back
மாநில செய்திகள்
போலியான சாவி தயாரித்து ஓட்டலில் பணம் திருடிய மேலாளர் கைது
சென்னை
மாநில செய்திகள்

போலியான சாவி தயாரித்து ஓட்டலில் பணம் திருடிய மேலாளர் கைது

தினத்தந்தி
|
3 Aug 2022 11:52 AM IST

விருகம்பாக்கம் அருகே போலியான சாவி தயாரித்து ஓட்டலில் பணம் திருடிய மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் தனியாருக்கு சொந்தமான இனிப்பகம் மற்றும் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லா பெட்டியில் இருந்த ரூ.54 ஆயிரம் பணம் கொள்ளை போனதாக ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதே ஓட்டலில் வேலை செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்த மேலாளர் சிவகுமார் (வயது 33), என்பவர் கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிவக்குமார் மற்றும் திருட்டுக்கு அவருக்கு உடைந்தையாக இருந்த ராஜ் (27), ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதே ஓட்டலில் 14 ஆண்டுகளாக பணிபுரிந்த சிவகுமார் போலியான சாவிகளை தயார் செய்து ஓட்டலின் கல்லா பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.54 ஆயிரம் பணத்தை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

மேலும் செய்திகள்