< Back
மாநில செய்திகள்
ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

ஆட்டோவில் கஞ்சா விற்றவர் கைது

தினத்தந்தி
|
6 Oct 2023 2:30 AM IST

அம்பையில் ஆட்டோவில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

அம்பை:

அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், அம்பை- வாகைக்குளம் ரோட்டில் துணை மின்நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அம்பை கவுதமபுரி தெற்கு தெருவைச் சேர்ந்த முருகேஷ் (வயது 30) என்பவர் ஓட்டி வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதில், அவர் விற்பனைக்காக 32 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்