< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தியவர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை கடத்தியவர் கைது

தினத்தந்தி
|
1 Oct 2023 6:40 PM IST

மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதனையடுத்து அவரின் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு திருத்தணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது திருத்தணி - சித்தூர் சாலையில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கில்களில் வந்த நபரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் 119 டாஸ்மாக் குவாட்டர் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் அரக்கோணம் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை (வயது 52) என தெரிந்தது. இதனையடுத்து அண்ணாதுரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 119 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்