< Back
மாநில செய்திகள்
தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் - தற்கொலை முயற்சியா என போலீஸ் விசாரணை
மாநில செய்திகள்

தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் - தற்கொலை முயற்சியா என போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
7 May 2023 10:56 PM IST

ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த ஆல்பர்ட் என்பவர் நெல்லை ஜங்ஷனில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆற்றில் தற்போது குறுகலான தடத்தில் மட்டுமே நீர் சென்று கொண்டிருப்பதால், ஆல்பர்ட் நேராக மணல் பரப்பின் மீது விழுந்துள்ளார்.

அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கீழே விழுந்த நபர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தற்கொலை முயற்சியா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் செய்திகள்