< Back
மாநில செய்திகள்
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் விமான நிலையத்தில் கைது
திருச்சி
மாநில செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் விமான நிலையத்தில் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 1:50 AM IST

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

செம்பட்டு:

சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் நேற்று காலை 7.50 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஆனந்தன் கோட்டை குடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகன்(வயசு 45) என்பவர் மீது, அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள், ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். இது பற்றி போலீசார், அறந்தாங்கி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் முருகனை கைது செய்து, அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்