< Back
மாநில செய்திகள்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
|21 April 2023 1:00 AM IST
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மணல்மேடு அருகே உள்ள உச்சிதமங்கலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது40). இவருடைய உறவினர் சீர்காழி தென்னலகுடியைச் சேர்ந்த வீரமணி மகன் விக்னேஷ் (25) என்பவர் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வந்ததிலிருந்து சோகமாக காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை அருகில் உள்ள கிழாய் ஓடக்கரை பகுதியில் மதுவுடன் பூச்சி மருந்தை (விஷம்) கலந்து குடித்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.