< Back
மாநில செய்திகள்
மனைவி கணக்கு கேட்டதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

மனைவி கணக்கு கேட்டதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தினத்தந்தி
|
4 April 2023 12:45 AM IST

வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்துக்கு மனைவி கணக்கு கேட்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்துக்கு மனைவி கணக்கு கேட்டதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாட்டில் வேலை

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் பண்டாரத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் கதிரேசன்(வயது 44). விவசாய தொழிலாளி. இவருடைய மனைவி வனஜா. இவர்களுக்கு 1 ஆண் குழந்தை, 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த வனஜா, சமீபத்தில் ஊர் திரும்பினார். ஊருக்கு வந்தவுடன் அவர் தனது கணவரிடம் தான் அனுப்பிய பணத்திற்கு கணக்கு கேட்டுள்ளார். இதனால் கணவன்- மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் மன வேதனை அடைந்த கதிரேசன் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த வேதாரண்யம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதிரேசனின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து தான் அனுப்பிய பணத்துக்கு மனைவி கணக்கு கேட்டதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்