< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பெசன்ட் நகரில் மது வாங்கித்தர மறுத்தவருக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது
|1 Sept 2022 12:41 PM IST
பெசன்ட் நகரில் மது வாங்கித்தர மறுத்தவருக்கு கத்திக்குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 43). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மது வாங்கி தருமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுத்ததால் ரத்தினத்தை கத்தி மற்றும் பீர்பாட்டிலால் குத்தினர். இதில் காயம் அடைந்த ரத்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பான புகாரின்பேரில் சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆல்பர்ட் வினோ (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவாக உள்ள நடராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.