திருப்பத்தூர்
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது
|மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டு, 15 வாகனங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீஸ் சூப்பிரண்ட் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையிலான தனிப்படை அமைத்து தேடி வந்தனர்
இந்த நிலையில் தனிப்படை போலீசார் திருப்பத்தூர் தாமலேரிமுத்தூர் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகபடும்படியான நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் மாடப்பள்ளி ஊராட்சி கோனேரிகுப்பம் பகுதியை சேர்ந்த சுகுமாரின் மகன் பாலாஜி (வயது 20) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை செய்தபோது ஜோலார்பேட்டை, குசிலாப்பட்டு, ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரு சக்கர வாகனம் திருடியதாக ஒப்புக்கொண்டார்.
அவரிடம் இருந்து 15 மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டர் உட்படஇரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து குரிசிலாப்பட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பாலாஜியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.