< Back
மாநில செய்திகள்
அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஆண் சாவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஆண் சாவு

தினத்தந்தி
|
26 Jan 2023 2:29 PM IST

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னையில் இருந்து மங்களூரு நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பலியான அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுபற்றி ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்