< Back
மாநில செய்திகள்

தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

21 Jun 2023 2:02 AM IST
மின்சாரம் தாக்கி கொத்தனார் இறந்தார்.
கும்பகோணம் அருகே உள்ள வடமட்டம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது34). கொத்தனார். இவர் நேற்று மதியம் திருநீலக்குடி அருகே ஏழாம் கட்டளை கிராமத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கம்பியை தூக்கிச்சென்ற போது மேலே சென்ற மின் ஒயரில் பட்டு மின்சாரம் தாக்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.