< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணம் திருடியவர் சிக்கினார்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணம் திருடியவர் சிக்கினார்

தினத்தந்தி
|
21 July 2023 2:53 AM IST

தச்சநல்லூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணம் திருடியவர் போலீசாரிடம் சிக்கினார்.

மானூர் அருகே உள்ள களக்குடி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லசாமி. இவர் கடந்த 18-ந்தேதி நெல்லை தச்சநல்லூரியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த சுமார் ரூ.33 ஆயிரத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தச்சநல்லூர் துர்க்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் (44) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.31 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்