< Back
மாநில செய்திகள்
வெப்படையில்  அடையாளம் தெரியாத ஆண் பிணம்  யார் அவர்? போலீசார் விசாரணை
நாமக்கல்
மாநில செய்திகள்

வெப்படையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
4 Jun 2022 4:56 PM GMT

வெப்படையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் தனியார் விற்பனை நிலையம் அருகில் 52 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதை கண்ட பொதுமக்கள் உடனடியாக வெப்படை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்