< Back
மாநில செய்திகள்
போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது

தினத்தந்தி
|
16 Jun 2023 1:44 AM IST

போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூர் செல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் பயணம் செய்பவர்களிடம் சரியான ஆவணங்கள் உள்ளதா? என்பதை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் சந்தேகத்திற்கு இடமான வகையில், திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.சி. நகர் பகுதியை சேர்ந்த முருகன்(வயது 49) என்ற பெயரில் பாஸ்போர்ட்டு இருந்ததை அறிந்த இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்த முத்துக்கருப்பன்(48) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்