< Back
மாநில செய்திகள்
இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவர் கைது

தினத்தந்தி
|
1 Oct 2022 2:13 PM IST

இளம்பெண்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் அதே பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று குளியல் அறையில் 2 இளம் பெண்கள் குளிப்பதை சதீஷ்குமார் ஜன்னல் வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இது குறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில், அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்து அதை ஆய்வு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்