< Back
மாநில செய்திகள்
திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
கடலூர்
மாநில செய்திகள்

திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

தினத்தந்தி
|
18 Oct 2023 1:02 AM IST

திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டாா்.

திட்டக்குடி,

பெண்ணாடம் பஸ் நிலையம் அருகில் சந்தேகப்படும்படியான நிலையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த மணிவண்ணன்(வயது 47) என்பதும், திட்டக்குடி பெருமுளை ரோட்டை சேர்ந்த சிவனேசன் என்பவர் வீட்டில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிவண்ணனை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்