< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்செந்தூர் கோவில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
|6 July 2022 9:47 PM IST
திருச்செந்தூர் கோவில் உண்டியலில் இருந்து பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 2-ம் பிரகாரத்தில் உள்ள செப்புக் கொடிமரம் அருகே உண்டியல் உள்ளது. நேற்று இரவு இந்த உண்டியலில் இருந்து ஒருவர் கம்பி மூலம் பணம் திருடிக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த கோவில் பணியாளர்கள் அவரை கையும் களவுமாக பிடித்து கோவில் உள்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அவரை உள்துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கோவில் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கணேசபுரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் இளங்கோவன(வயது 39) என தெரியவந்தது.
சம்பவம் குறித்து கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் வழக்கு பதிவு செய்து இளங்கோவனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து உண்டியலில் திருடிய பணம் ரூ.3 ஆயிரத்து 40 பறிமுதல் செய்யப்பட்டது.