< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர் கைது
|15 Jun 2023 12:56 AM IST
டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் உப்பாத்து காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் கடந்த மாதம் 29-ந் தேதி புகுந்த மர்மநபர்கள் ஷட்டர் கதவை உடைத்து சுமார் ரூ.3 லட்சத்து 94 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து கடை மேற்பார்வையாளர் தாயுமானவர் என்பவர் வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது களக்காடு கடம்போடுவாழ்வு பகுதியைச் சேர்ந்த அழகியநம்பி (வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து, ரூ.82 ஆயிரம் மதிப்புள்ள 571 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.