< Back
மாநில செய்திகள்
கோவிலில் நகை திருடியவர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

கோவிலில் நகை திருடியவர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2023 12:52 AM IST

கோவிலில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் உமையாள்புரம் அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி திருட்டு போனது. இதில் தொடர்புடையவரை விரைந்து பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் மாவட்டம் மாயனூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது34) என்பவர் கோவிலில் சாமியின் நகையை திருடியது தெரியவந்தது. திருச்சி மாவட்டம் பிச்சாண்டார் கோவில் பகுதியில் ஒரு வீட்டில் இருந்த அவரை தனிப்படையினர் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். இவர் மீது திருச்சி, கரூர், அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்