< Back
மாநில செய்திகள்
1½ வயது குழந்தை அணிந்திருந்த தங்கச்சங்கிலியை திருடியவர் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

1½ வயது குழந்தை அணிந்திருந்த தங்கச்சங்கிலியை திருடியவர் கைது

தினத்தந்தி
|
30 Dec 2022 12:15 AM IST

1½ வயது குழந்தை அணிந்திருந்த தங்கச்சங்கிலியை திருடியவர் கைது


திருப்புல்லாணி அருகே உள்ள காடுகாவல் காரன்வலசையை சேர்ந்தவர் விஜயபிரகாஷ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சினேகா (வயது 26). இவர்களுக்கு யஸ்வின் சுந்தர்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. சினேகா தனது குழந்தையை வெளியில் வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் (20) என்பவர் மோட்டார் சைக்கிளில் குழந்தையை வைத்து சுற்றிக்கொண்டு விளையாட்டு காட்டி வருவதாக கூறி பைக்கில் அமர வைத்து கூட்டி சென்றுள்ளார். சிறிது நேரத்தில் திருப்பி கொண்டு வந்து விட்டு விட்டு சிவராஜ் அங்கிருந்து சென்றுள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் கழுத்தில் பார்த்தபோது 1½ பவுன் தங்கசங்கிலியை காணாததை கண்டு சினேகா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சினேகா திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவராஜை பிடித்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் சிவராஜ் குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை எடுத்ததை ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து அவரிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறிமுதல் செய்த போலீசார் சிவராஜை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்