< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
கேளம்பாக்கம் அருகே விடுதியில் செல்போன், மடிக்கணினி திருடிய நபர் கைது
|9 Jun 2023 4:29 PM IST
கேளம்பாக்கம் அருகே விடுதியில் செல்போன், மடிக்கணினி திருடிய மர்ம நபரை மடக்கி பிடித்து கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பலர் மாத வாடகைக்கு தங்கி உள்ளனர். இந்த விடுதியை பராமரித்து வந்த சின்மயானந்த் என்பவர் நேற்று காலை அறையில் உள்ள குளியலறைக்கு சென்று குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது அறைக்கு வந்து அங்கு இருந்த விலை உயர்ந்த செல்போன், மடிக்கணினி போன்றவற்றை திருடிச்செல்ல முற்பட்டார். சத்தம் கேட்டு ெவளியே வந்த சின்மயானந்த் கூச்சலிட்டார். அங்கு இருந்தவர்கள் மர்ம நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் குடியாத்தம் அருகே உள்ள சங்கராபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (27) எனள்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.