< Back
மாநில செய்திகள்
தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

திங்கள்சந்தையில் தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திங்கள்சந்தை:

திங்கள்சந்தையில் தொழிலாளியை மது பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

திங்கள்சந்தை பறையன்விளையை சேர்ந்தவர் ராஜூ (வயது52), தொழிலாளி. ராஜூ நேற்று முன்தினம் மாலையில் திங்கள்சந்தை ரவுண்டானா நெய்யூர் சாலையில் உள்ள ஒரு கடையின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நெய்யூர் மிஞ்சன் தெருவை சேர்ந்த தனபால் (37) என்பவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ராஜூ பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனபால் தகாத வார்த்தையால் பேசி கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து ராஜூவை குத்தினார். இதில் படுகாயமடைந்த ராஜூ சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் ராஜூவுக்கு கொலை மிரட்டல் விடுத்து தனபால் அங்கிருந்து தப்பிச் சென்றார். படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராஜூவின் சகோதரர் ஜெகதீஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்