< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
வேலூர்
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2022 10:28 PM IST

வேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூரை அடுத்த செதுவாலை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிஞ்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அதில், அவர் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த நரேஷ்குமார் (வயது 20) என்பதும், அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நரேஷ்குமாரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நரேஷ்குமார் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார், அதனை கொண்டு செல்லும் இடம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்