கன்னியாகுமரி
இரணியல் அருகே மளிகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியவர் கைது
|இரணியல் அருகே மளிகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே உள்ள காரங்காடு புல்லுவிளையை சேர்ந்தவர் பால்பாண்டியன் (வயது 67). இவர் பேயன்குழியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் புதுக்கடை பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிகிறது.
பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று காலை இரணியல் போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் மற்றும் பால்பாண்டியன் தரப்பினர் இடையே போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று மாலை கடையில் இருந்த பால் பாண்டியனை, நாகேந்திரன் உறவினர் அஜிகுமார் என்பவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பால்பாண்டியனை அப்பகுதி மக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இரணியல் போலீசார் அஜிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.