< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது
|17 Jun 2024 5:13 AM IST
இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என இளம்பெண்ணை மிரட்டி விட்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார்.
சென்னை,
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம், பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 44). இவருக்கு சொந்தமான போரூர் அடுத்த சேக்மான்யம், அலங்கார் தெருவில் உள்ள வீட்டில் 35 வயது இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் வீ்ட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம், சங்கர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே சங்கர், இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சங்கரை கைது செய்து அவர் மீது பெண் வன்கொடுமை உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.