< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது
|31 March 2024 10:58 PM IST
சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் ஓட்டேரி பனந்தோப்பு ரெயில்வே காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் சோதனை செய்தபோது, 120 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 200 கிராம் மாவா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்ட நபர், அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் தாஸ் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.