< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
வேலூர்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
26 May 2022 11:04 PM IST

குடியாத்தம் பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தம்

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி உள்ளிட்ட போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சோனியா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ஹரீஷ் (வயது 19) என்பவர் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஹரீஷ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஹரீஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்