< Back
மாநில செய்திகள்
பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது
மாநில செய்திகள்

பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 March 2024 4:23 AM IST

மாணவியை கட்டாய திருமணம் செய்ததுடன், வெளியில் கூறினால் குடும்பத்துடன் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் 16 வயதுடைய பள்ளி மாணவியை கடந்த 2 வருடங்களாக காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் குடும்பத்துடன் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவி கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்