< Back
மாநில செய்திகள்
ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகமாகி சொத்து வழக்கைத் தீர்த்து வைப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது
மாநில செய்திகள்

ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகமாகி சொத்து வழக்கைத் தீர்த்து வைப்பதாக கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது

தினத்தந்தி
|
19 May 2024 4:27 PM GMT

ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அறிமுகமாகி சொத்து வழக்கைத் தீர்த்து வைப்பதாக கூறி ரூ.27 லட்சம் பெற்று மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் வைஷ்ணவ் என்பவர், இளங்கோவனிடம் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி செய்து வருவதாக கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும், சொத்து வழக்கை முடித்து தருவதாக கூறி 27 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஆனால், வழக்கு ரீதியாக எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இளங்கோவன் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு, ஆனந்த் வைஷ்ணவிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விவசாயி இளங்கோவன் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற ஆனந்த் வைஷ்ணவ், ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்த் வைஷ்ணவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்