அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்த நபர் கைது
|அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.25 லட்சம் பெற்று மோசடி செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
விருதுநகர் மாவட்டம் நல்லமங்களத்தைச் சேர்ந்த ஜேசுராஜா என்பவர், மதுரையில் சிறப்பு தாசில்தாராக பணியாற்றுவதாக பலரிடம் கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியுள்ளார். இதை நம்பி கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது மனைவிக்கு அரசு வேலை வாங்கித் தர கோரி ரூ. 25 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் மீதி 2 லட்சம் ரூபாயை வாங்க வீட்டுக்கு வந்த ஜேசுராஜாவிடம், சக்திவேல் அடையாள அட்டையை கேட்டுள்ளார். அப்போது சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜேசுராஜ் அங்கிருந்து தப்பியோடினார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஜேசுராஜாவை கைது செய்தனர். விசாரணையில் ஜேசுராஜா ஏற்கனவே இருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜேசுராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.