< Back
மாநில செய்திகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
அம்மன் சிலையை சேதப்படுத்தியவர் கைது
|24 Jun 2022 12:16 AM IST
அம்மன் சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
துத்திப்பட்டு ஊராட்சி புதுமனை பகுதியில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது. நேற்று இந்தக் கோவிலுக்குள் புகுந்த ஒருவர் திடீரென அங்குள்ள அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 40) என்பதும், தையல்காரராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.