< Back
மாநில செய்திகள்
பெண்ணை சோடா பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

பெண்ணை சோடா பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 Jun 2022 1:35 AM IST

பெண்ணை சோடா பாட்டிலால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:

திருச்சி பெரிய மிளகுபாறை புதுத்தெருவை சேர்ந்தவர்கள் கண்ணன்-பஞ்சவர்ணம் தம்பதி. இவர்களின் மகளை அதே பகுதியில் நாயக்கர் வீதியை சேர்ந்த சிவக்குமாரின் மகன் நவீன்குமார்(வயது 22) காதலித்துள்ளார். கடந்த 21-ந்தேதி அந்த பெண் வேலைக்கு சென்றபோது, நவீன்குமார் அவரை மறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.

இதுபற்றி அறிந்த கண்ணன்-பஞ்சவர்ணம் தம்பதி நவீன்குமாரை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அந்த தம்பதியை நவீன்குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கு கிடந்த சோடா பாட்டிலால் பஞ்சவர்ணத்தை தாக்கியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து பஞ்சவர்ணம் கொடுத்த புகாரின் பேரில், செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் நவீன்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்