கன்னியாகுமரி
மார்த்தாண்டம் அருகேமினி பஸ் டிரைவரை தாக்கி தங்கச்சங்கிலி பறிப்புஒருவர் கைது
|மார்த்தாண்டம் அருகே மினி பஸ் டிரைவரை தாக்கி தங்கச்சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே மினி பஸ் டிரைவரை தாக்கி தங்கச்சங்கிலி பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜின்குமார் (வயது 34), மினி பஸ் டிரைவர். இவருக்கும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அனீஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று விஜின்குமார் மினிபஸ்சை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். மார்த்தாண்டம் அருகே களுவன்திட்டை பகுதியில் சென்றபோது, அங்கு வந்த அனீஷ் உள்பட 5 பேர் தகாத வார்த்தையால் பேசி விஜின்குமாரை தாக்கினர். பின்னர், விஜின்குமார் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்தனர். இதில் தங்கச்சங்கிலி அறுந்ததில் ஒரு பவுன் தங்கச்சங்கிலி, சட்டை பையில் வைத்திருந்த செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து விஜின்குமார் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் அனீஷ் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அனீசை கைது செய்தனர்.