< Back
மாநில செய்திகள்
பெண் போலீசை தாக்கியவர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

பெண் போலீசை தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
10 Oct 2023 12:42 AM IST

இருக்கன்குடி கோவிலில் பெண் போலீசை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் உட்கோட்டத்தில் பணியாற்றி வரும் 35 வயதுைடய பெண் போலீஸ் சம்பவத்தன்று இருக்கன்குடி கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அதே கோவிலில் காவலாளியாக பணியாற்றி வரும் மணிசங்கர் (வயது 21) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மணிசங்கர், பெண் போலீசை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் பெண் போலீசையும், அவரை தாக்கிய வாலிபரையும் அங்கிருந்த போலீசார் புறக்காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் பெண் போலீசுக்கும், வாலிபருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்தது தெரியவந்தது.இந்தநிலையில் அரசு பணி செய்ய விடாமல் பெண் போலீசை தடுத்து, தாக்கியதாக மணிசங்கர் மீது சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் இருக்கன்குடி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மணிசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்