< Back
மாநில செய்திகள்
பட்டுக்கோட்டையில், பள்ளிக்கூடம் அருகே    கஞ்சா விற்ற வாலிபர் கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பட்டுக்கோட்டையில், பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 Oct 2022 1:12 AM IST

பட்டுக்கோட்டையில், பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை பாக்கியம் நகரில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் அருகில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் பாளையம் பூக்கொல்லை ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த முத்துமணி (வயது22) என்று தெரியவந்தது. அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர் கஞ்சா வியாபாரம் செய்ததும், அவரிடமிருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துமணியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்