< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
|1 Nov 2022 12:30 AM IST
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நாளை சந்தித்து பேச உள்ளார்.
சென்னை,
மணிப்பூர், மேற்கு வங்காள கவர்னராக (பொறுப்பு) உள்ள இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார்.
இந்த நிலையில் அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், 2-ந் தேதி (நாளை) மாலை தமிழகத்துக்கு வருகை தரும் மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேச உள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.