< Back
மாநில செய்திகள்
மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி-4 பேர் மாயம்- சுற்றுலா வந்த போது சோகம்
மாநில செய்திகள்

மாமல்லபுரம்: ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி-4 பேர் மாயம்- சுற்றுலா வந்த போது சோகம்

தினத்தந்தி
|
2 March 2024 6:21 PM IST

மாமல்லபுரம் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட 5 கல்லூரி மாணவர்களில், ஒருவர் உடல் மட்டும் கரை ஒதுங்கிய நிலையில், 4 பேர் மாயமாகியுள்ளனர்.

மாமல்லபுரம்,

ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 40 பேர் இரு குழுக்களாக இன்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அனைத்து புராதன சின்னங்கங்களையும் பார்த்த கல்லூரி கடற்கரைக்கு சென்றனர்.

அங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடலில் இறங்கி குளித்தனர். இதில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 10 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. இதில் உயிருக்கு போரடிய 5 மாணவர்களை அங்குள்ள மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.எனினும், அலையில் இழுத்து செல்லப்பட்ட நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய்(வயது24) என்ற மாணவர் மூச்சு திணறி உயிரிழந்தார்.

அவரது உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. பிறகு மாயமான அனந்தபூர் பகுதியை சேர்ந்த தனியார் கலைக்கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ்(26), ஷேசாரெட்டி(25), நலகாம்பள்ளியை சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் மவுனீஷ்(வயது18), பார்த்துஷா(வயது19) ஆகிய 4 பேர் கடலில் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்