< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில்தெரு ஓரத்தில் ஆண் பிணம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில்தெரு ஓரத்தில் ஆண் பிணம்

தினத்தந்தி
|
18 April 2023 2:27 AM IST

நாகர்கோவிலில்தெரு ஓரத்தில் ஆண் பிணம் கிடந்தது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்தாண்டன் தெரு ஓரமாக நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது இறந்தவருக்கு 45 வயது இருக்கும் என்று தெரிய வந்தது. அவர் பெயர் மற்றும் ஊர் விவரம் தெரியவில்லை. உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்