< Back
மாநில செய்திகள்
பாலம் அருகே ஆண் பிணம்
திருச்சி
மாநில செய்திகள்

பாலம் அருகே ஆண் பிணம்

தினத்தந்தி
|
12 May 2023 2:58 AM IST

பாலம் அருகே ஆண் பிணம் கிடந்தது.

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் காலை ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கண்ேடான்மெண்ட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் நெல்லையை சேர்ந்த லட்சுமணன் (வயது 55) என்பது மட்டும் தெரியவந்தது. அவர் எதற்காக திருச்சி வந்தார்? எப்படி இறந்தார் என்று தெரியவில்லை? இதைத்தொடர்ந்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோ-அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் தன்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்