< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சிவகிரி அருகே கிணற்றில் ஆண் பிணம்
|22 Aug 2023 12:15 AM IST
சிவகிரி அருகே கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:
சிவகிரி அருகே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டைப்பாலம் அருகில் தனியார் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் உடலை சிவகிரி போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.