< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
விருதுநகர் அருகே ெரயில்பாதையில் ஆண் பிணம்
|11 Oct 2023 1:14 AM IST
விருதுநகர் அருகே ெரயில்பாதையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.
விருதுநகர் அருகே கவுசிகா நதி பாலம் அருகில் 40 வயது மதிக்கத்தக்க நபர் அந்த வழியாக சென்ற ெரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து ெரயில் பாதையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை? சிவப்பு சட்டையும். நீல கலர் கால் சட்டையும் அணிந்துள்ளார். இதுபற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.